பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிச்செல்லும் விமானப் பயணிகள் தங்கியிருக்கும் முனையத்தின் அளவை விரிவுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும் விமானப் பயணிகள் தரித்து நிற்கும் முனையத்தின் இடவசதிகளை விரிவுபடுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் 36 சோதனை செய்யும் கருமபீடங்கள் மற்றும் பயணிகள் முனையத்திலிருந்து விமானம் வரைக்கும் செல்கின்ற ஆறு (06) வாயில்களுக்கான புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான பெறுகைச் செயன்முறையை ஆரம்பிப்பதற்காக 2025.02.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு தகைமையுடைய ஒப்பந்தக்காரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக சர்வதேச போட்டி பெறுகை முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்கு மூன்று (03) விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
குறித்த விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் உயர்மட்ட பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதப்புரைகளின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான M/s Maga Engineering (Pvt) Ltd இற்கு 7.26 மில்லியன் அமெரிக்க டொலர் தொகைக்கு (பெறுமதி சேர் வரியில்லாமல்) மற்றும் 3.77 பில்லியன் இலங்கை ரூபாய்கள் தொகைக்கு (பெறுமதி சேர் வரியில்லாமல்) குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு துறைமுகங்கள் மற்;றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


