Tuesday, October 6, 2026
spot_img
Homeஉலக செய்திகள்விமானத்தை கடத்த முயற்சி?

விமானத்தை கடத்த முயற்சி?

துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த flydubai விமானத்தை இஸ்ரேல் சுட்டு வீழ்த்த தயாராக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 30ஆம் திகதி 180 பேருடன் பயணித்த இந்த விமானத்தில், இந்திய விமானி ஸ்மித் மச்சார் மற்றும் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல் ஹமாமி ஆகியோர் பணியில் இருந்தனர்.

விமானம் பயணித்துக்கொண்டிருந்தபோது, துணை விமானி கோடரியால் இந்திய விமானியை தாக்கி விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இஸ்ரேல் விமானப்படை விமானத்துடன் தொடர்புகொள்ள முயன்றதாகவும், பதில் கிடைக்காததால் போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய விமானி துணை விமானியை எதிர்த்து போராடி, விமானத்தை சவூதி அரேபியாவுக்கு திருப்பி பாதுகாப்பாக தரையிறக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 174 பயணிகள் உட்பட 180 பேரும் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments