Saturday, March 14, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்விக்ரமின்‘வீர தீர சூரன்’ படம் மார்ச் 27ம் தேதி வெளியீடு

விக்ரமின்‘வீர தீர சூரன்’ படம் மார்ச் 27ம் தேதி வெளியீடு

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் மார்ச் 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் தனது 62வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விக்ரமின் 62வது திரைப்படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரியா ஷிபு இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் விக்ரம் உடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.17ம் தேதி அவரது 62வது திரைப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்தது. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments