இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள போகபுரம் சுங்கச்சாவடி அருகே இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (24) காலை சுமார் 7.30 மணியளவில், தேசிய நெடுஞ்சாலை 16 இல் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லொறியுடன் கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள ஆலயமொன்றுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சாரதியின் சோர்வு காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகின்றது.
எனினும், விபத்துக்கான சரியான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


