Tuesday, March 17, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ரஸ்யாவின் ஆதரவை கோரி ஈரானின் ஆன்மீக தலைவர் கடிதம் - புட்டினிடம் வழங்குவார் வெளிவிவகாரஅமைச்சர்

ரஸ்யாவின் ஆதரவை கோரி ஈரானின் ஆன்மீக தலைவர் கடிதம் – புட்டினிடம் வழங்குவார் வெளிவிவகாரஅமைச்சர்

ரஸ்யாவின் ஆதரவை கோரி ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கமேனி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

1979ம் ஆண்டு புரட்சிக்கு பின்னர் அமெரிக்கா ஈரானிற்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையிலேயே கமேனி இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி புட்டினின் ஆதரவை கோரும் இந்த கடிதத்தை புட்டினிடம் வழங்கவுள்ளார் என விடயமறிந்த நபர்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர்.

ரஸ்யா இதுவரை வழங்கிய ஆதரவு குறித்து ஈரான் திருப்தியடையவில்லை என ஈரான் வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் ரஸ்யா மேலும் ஆதரவை வழங்கவேண்டும் என ஈரான் எதிர்பார்க்கின்றது.

எனினும் ஈரான் எவ்வாறான உதவியை எதிர்பார்க்கின்றது என ஈரானிய வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை.

புட்டின் ஈரானிய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளதை உறுதி செய்துள்ள ரஸ்ய அதிகாரிகள் இருவரும் எதுகுறித்து பேசுவார்கள் என்பதை தெரிவிக்கவில்லை.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments