லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
களத்தில், அரசாங்கப் படைகளுக்கும் ஹூதி குழுவிற்கும் இடையே கடுமையான சண்டைகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது ஹூதி குழுவினர் குண்டுவீச்சு நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஜபல் சப்ர் பகுதியில் உள்ள இந்தக் கிராமங்கள் முழுமையான முற்றுகையின் கீழ் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பொதுமக்களுக்காக பாதுகாப்பான பாதைகளைத் திறக்க அவசர வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன, மேலும் பொதுமக்களைக் குறிவைத்து தினசரி துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மக்கள், குறிப்பாகக் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


