யுஎஸ்எயிட் சீர்செய்ய முடியாத நிலைiயைஅடைந்துவிட்டது என தெரிவித்துள்ள அமெரிக்க கோடீஸ்வரர் எலொன் மஸ்க் அதனை மூடுவதற்கான நடவடிக்கைகளில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் நேரலை விவாதமொன்றை நடத்தியுள்ள மஸ்க் யுஎஸ்எயிட் குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் நீண்டநேரம் ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாங்கள் அதனை மூடவேண்டும் என்பதை டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார் என மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
யுஎஸ்எயிட் என்பது ஒரு புழு உள்ள அப்பிள் இல்லை பல புழுக்கள் காணப்படும் பொருள் என தெரிவித்துள்ள எலொன்மஸ்க் நீங்கள் அதனை முற்றாக இல்லாமல் செய்யவேண்டும்,அது சீர் செய்ய முடியாத நிலையை அடைந்துவிட்டது நாங்கள் யுஎஸ்எயிட்டினை மூடுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுஎஸ்எயிட் அமைப்பின் இரண்டு சிரேஸ்ட அதிகாரிகளை டிரம்ப் நிர்வாகம் விடுப்பில் அனுப்பியுள்ளது.


