Tuesday, November 10, 2026
spot_img
Homeகனடா செய்திகள்யார்க் பல்கலைக்கழகத்தில் இணைய வழித் தாக்குதல்

யார்க் பல்கலைக்கழகத்தில் இணைய வழித் தாக்குதல்

டொராண்டோ நகரில் அமைந்துள்ள பிரபல யார்க் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட இணையப் பாதுகாப்பு அத்துமீறல் காரணமாக தனிநபர் தகவல்கள் திருடப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி இந்த இணையத் தாக்குதல் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு முதல் 2026 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் தங்குமிட விண்ணப்பங்கள் மற்றும் ஆய்வுக் கணக்கெடுப்புகள் உள்ளிட்ட குறிப்பிட்ட இணையதளப் படிவங்களைப் பூர்த்தி செய்த நபர்களின் தகவல்களை அடையாளம் தெரியாத நபர் சட்டவிரோதமாகப் பெற்றுள்ளார்.

நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒரு சிறிய எண்ணிக்கையிலான நபர்களின் அரசு அடையாள ஆவணங்கள் அல்லது நிதி சார்ந்த கணக்கு விவரங்கள் கசிந்துள்ளதாக யார்க் பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. வெளிப்புற வல்லுநர்களின் உதவியுடன் உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட இணையதளங்களைத் தாண்டி பல்கலைக்கழகத்தின் பிற அமைப்புகளுக்குள் ஊடுருவல் நிகழவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், தனிப்பட்ட விவரங்கள் கசிந்த நபர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக டிரான்ஸ்யூனியன் கிரெடிட் கண்காணிப்பு மற்றும் அடையாளத் திருட்டு பாதுகாப்பு சேவையை பல்கலைக்கழகம் வழங்குகிறது. இச்சம்பவம் குறித்து ஒன்ராறியோவின் தகவல் மற்றும் தனியுரிமை ஆணையர் மற்றும் சட்ட அமலாக்கத் துறையிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments