Sunday, March 15, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்மைதானத்திலேயே வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பாலுக்கு நெஞ்சுவலி

மைதானத்திலேயே வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பாலுக்கு நெஞ்சுவலி

டாக்கா பிரீமியர் லீக் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பாலுக்கு மைதானத்திலேயே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வங்காளதேசத்தில் தற்போது டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முகமதின் ஸ்போர்ட்டிங் கிளப் – ஷைன்புகூர் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஷைன்புகூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. முகமதின் அணி பீல்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் தமிம் இக்பாலுக்கு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து மைதானத்துக்கு விரைந்து வந்த மருத்துவக் குழு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். விமானம் மூலம் அவரை டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது. இதையடுத்து அவர் பாசிலதுன்னேசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments