Sunday, October 18, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மெக்சிகோவில் படகு கவிழ்ந்து விபத்து - 11 பேர் மாயம்

மெக்சிகோவில் படகு கவிழ்ந்து விபத்து – 11 பேர் மாயம்

மெக்சிகோவில் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த படகு, மெக்சிகோ – எசண்டனா நகரில் இருந்து நேற்று புறப்பட்டுள்ளது. பசுபிக் கடலில் சென்ற அந்த படகில் அந்நாட்டை சேர்ந்த 27 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த மெக்சிகோ கடற்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் கடலில் மூழ்கி 11 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதேவேளை, கடலில் மூழ்கி மாயமான 11 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments