Saturday, March 14, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மூத்த பத்திரிகையாளர்கள் நக்கீரன் கோபால், சுகிதாவுக்கு "கலைஞர் எழுதுகோல் விருது"- முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார்

மூத்த பத்திரிகையாளர்கள் நக்கீரன் கோபால், சுகிதாவுக்கு “கலைஞர் எழுதுகோல் விருது”- முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார்

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவாக ஆண்டு தோறும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிய சிறந்த இதழியலாளர்க்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2023-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

அதன்படி, கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, பெண்மையைப் போற்றும் வகையில், 2023-ஆம் ஆண்டின் சிறந்த பெண் இதழியலாளருக்காக பிரபல நியூஸ் சேனலின் செய்தி ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கலைஞர் எழுதுகோல்’ விருதினை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து ‘நக்கீரன்’ கோபாலுக்கும் முதலமைச்சர் ‘கலைஞர் எழுதுகோல்’விருது வழங்கி கவுரவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments