Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு ; சாரதி கைது

முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு ; சாரதி கைது

பிபில – மெதகம வீதியில் மெதகம தபால் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து நேற்று திங்கட்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், மெதகம பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஆவார்.

பிபிலவிலிருந்து மெதகம நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் மீது மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிபில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments