Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மஹிந்தானந்தவிற்கும் நளினிற்கும் வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சுபிரிவில் வேலை

மஹிந்தானந்தவிற்கும் நளினிற்கும் வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சுபிரிவில் வேலை

நீதிமன்றத்தினால் கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கும் நளின் பெர்ணான்டோவிற்கும் வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சுப் பிரிவில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகாரிகள் ஆயுள்தண்டனை அனுபவிக்கும் கைதிகளும் கொலை மற்றும் பாலியல்வன்முறை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் சப்பல் பிரிவிலிருந்து இருவரையும் பிரித்து ஒன்றாக வைத்துள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருவரினதும் பாதுகாப்பை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் அரசியல் எதிரிகள் இருக்ககூடும் என்பதை அதிகாரிகள் கருத்தில் கொண்டுள்ளனர் என வெலிக்கடை சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறைச்சாலையின் அச்சுபிரிவு தனக்கு தேவையான ஆவணங்களை அச்சிடுவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments