Monday, March 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

மொனராகலையில் மெதகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பலகஸ்ஆர பகுதியில் தனது மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மெதகம, பலகஸ்ஆர பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய கணவர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட கணவன் கடந்த 14 ஆம் திகதி குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

38 வயதுடைய மனைவியே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து கணவர் பிரதேசத்தைவிட்டு தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

கணவர், தனது மனைவியை கொலை செய்த வீட்டிற்குச் சென்று தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மெதகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments