Saturday, March 14, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்‘பைரவம்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

‘பைரவம்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

வெற்றிமாறன் கதையை அவரது உதவி இயக்குநரான துரை செந்தில்குமார் கருடன் எனும் பெயரில் படமாக இயக்கியிருந்தார். சூரி நடித்த இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன், சமுத்திரகனி உட்பட பலரும் நடித்தனர். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. வசூல், விமர்சனம் என அனைத்திலுமே கொண்டாடப்பட்டது.

தற்போது, கருடன் படத்தை தெலுங்கில் மறுபதிப்பு செய்து அதற்கு ’பைரவம்’ என்று படக்குழு பெயர் சூட்டியது. இதனை ‘நந்தி’ படத்தினை இயக்கிய விஜய் கனகமெடலா இயக்கி வருகிறார். இப்படத்தில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நரா ரோஹித், ஆனந்தி , திவ்யா பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் தெலுங்கில் முதல் படத்தில் அதிதி ஷங்கர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், பைரவம் படத்தின் முன்னோட்டம் வெளியானது. மேலும், விரைவில் திரைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments