Monday, March 16, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்பெருநகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு எட்டாகனியாகி விட்டது – ராகுல்காந்தி

பெருநகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு எட்டாகனியாகி விட்டது – ராகுல்காந்தி

நிறைய இதயங்களில், ஒரு நாள் நமக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்கும் என்ற ஒரு கனவு இருக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மும்பை மாநகரில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால், நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கள் வருவாயில் ஆண்டுக்கு 30 சதவீத சேமிப்பு என 109 ஆண்டு கால சேமிப்பு தேவைப்படுகிறது என ஒரு புள்ளி விவரம் தெரிவிப்பதாக வெளியாகி உள்ள செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது வாட்ஸ்அப் சேனலில் கூறி இருப்பதாவது: வீடுகளின் விலை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. குறிப்பாக பெரிய நகரங்களில் வீடு வாங்குவது என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கும்கூட எளிதல்ல. அவர்கள், தங்களின் ஆண்டு வருமானத்தில் 30 சதவீதத்தை 109 ஆண்டுகளுக்கு சேமித்தால் மட்டுமே மும்பையில் வீடு வாங்க முடியும். ஏழைகளுக்கு வீடு வாங்குவது என்பது எட்டாகனியாகி விட்டது. நிறைய இதயங்களில், ஒரு நாள் நமக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்கும் என்ற ஒரு கனவு இருக்கிறது. ஆனால் அந்த ‘ஒரு நாள்’ நடுத்தர வர்க்கத்தினருக்குக்கூட 109 வருடங்களுக்குப் பிறகே வரும் எனும்போது, ஏழைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஏழைகள் கனவு காணும் உரிமையை இழந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அடுத்த முறை யாராவது மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்களை உங்களிடம் கூறும்போது, உங்கள் உள்நாட்டு பட்ஜெட் பற்றிய உண்மையை அவர்களுக்குக் காட்டுங்கள் – மேலும், இந்தப் பொருளாதாரம் யாருக்காக என்று கேளுங்கள்? என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments