Wednesday, March 18, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்பெங்களூரு அணி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்-மந்திரி

பெங்களூரு அணி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்-மந்திரி

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. அகமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி, 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணியின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக, அதாவது 18 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் கோப்பையை வென்றுள்ள பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் ஆர்சிபி அணி வீரர்கள் இன்று பெருங்களூரு வந்தடைந்தனர். அவர்களை கர்நாடகாவின் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் விமானத்தின் அருகிலேயே சென்று பூக்கொத்துடன் வரவேற்றார். அவருடன் விராட்கோலி ஆர்சிபி கொடியை வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments