Wednesday, March 11, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்புஷ்பா- 2 ஒரு டிக்கெட் விலை ரூ. 3,000!

புஷ்பா- 2 ஒரு டிக்கெட் விலை ரூ. 3,000!

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா – 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

படத்தின் டிரைலர் வெளியாகி இந்தியளவில் பெரிய வரவேற்பைப் பெற்றதால் இப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. புஷ்பா – 2 திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகியுள்ளது.

வெளியீட்டுத் தேதியில் தயாரிப்பு நிறுவனம் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதன்படி, டிச. 4 ஆம் தேதி இரவு 9.30 மணியிலிருந்தே தெலங்கானாவில் புஷ்பா – 2 திரையிடப்படுகிறது. டிக்கெட் விலையாக ரூ. 1,120 – 1,240 வரை உயர்த்தியுள்ளனர்.

அதேநாளில் தமிழகத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மும்பையிலுள்ள பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் புஷ்பா – 2 முதல் நாளுக்கான ஒரு டிக்கெட் விலை ரூ. 3,000 ஆக நிர்ணயம் செய்துள்ளனர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் மீதான எதிர்பார்ப்பைப் பயன்படுத்தி இப்படி டிக்கெட் விலையைக் கடுமையாக உயர்த்தியது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுவே, இதுவரை வெளியான இந்திய திரைப்படங்களிலே அதிக டிக்கெட் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments