Monday, March 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் 16 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றல் -...

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் 16 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றல் – பதில் பொலிஸ் மா அதிபர்

2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு பின்வருமாறு,

• 1,253 கிலோகிராம் ஹெரோயின்

• 2,121 கிலோகிராம் ஐஸ்

• 12,491 கிலோகிராம் கஞ்சா

• 22 கிலோகிராம் கொக்கெய்ன்

• 1.6 மில்லியன் போதை வில்லைகள் (narcotic pills)

• 1 மில்லியன் போதை மாத்திரைகள் (narcotic tablets)

இந்நிலையில், கடந்த 5 மாதங்களில் மாத்திரம் 2 மெற்றிக் தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுளு்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments