Tuesday, November 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பாழடைந்த கிணற்றில் சடலம் - கொலை என உறுதி

பாழடைந்த கிணற்றில் சடலம் – கொலை என உறுதி

ஹொரொவ்பொத்தானை, இஹல கும்புக்கொல்லேவ பகுதியில் பாழடைந்த விவசாயக் கிணறு ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளில், அதுவொரு கொலை என்பது காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 17 வயதுடைய யுவதி ஒருவரும், இரு இளைஞர்களும் ஹொரொவ்பொத்தானை காவல்துறையினரால் நேற்று (15) இஹல கும்புக்கொல்லேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 23 மற்றும் 26 வயதுடையவர்களாவர்.

கைது செய்யப்பட்ட யுவதி உட்பட மூவரும் இஹல கும்புக்கொல்லேவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி ஹொரொவ்பொத்தானை, இஹல கும்புக்கொல்லேவ பகுதியில் உள்ள பாழடைந்த விவசாயக் கிணறு ஒன்றிற்குள் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இது குறித்த தீவிர விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

தொடர் விசாரணைகளின் போதே குறித்த மரணம் ஒரு கொலையாகும் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த ச ம்பவம் தொடர்பில் ஹொரொவ்பொத்தானை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments