Monday, June 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பாப்பரசர் உடையில் டிரம்ப் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

பாப்பரசர் உடையில் டிரம்ப் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பாப்பரசர் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நித்திய இளைப்பாற்றி அடைந்தார்.

மறைந்த பாப்பரசருக்கு இலட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்திய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இத்தாலியின் உரோமில் பாப்பரசரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அடுத்த பாப்பரசர் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் 7 ஆம் திகதி இரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப், பாப்பரசர் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செய்யறிவு (AI ) புகைப்படம் என்று கூறப்படும் டிரம்ப்பின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments