Wednesday, March 18, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்!

‛பாகுபலி’ நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்!

ராஜமவுலி இயக்கிய ‛பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து உலக அளவில் பிரபலமானவர் பிரபாஸ். அதன்பிறகு தொடர்ந்து பான் இந்தியா படங்களில் நடித்து வரும் பிரபாஸ், பாகுபலி படத்தில் நடித்து வந்தபோது அவரும், அனுஷ்காவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அதையடுத்து அவர்கள் இரண்டு பேருமே நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று சொல்லி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

அதன் பிறகும் பிரபாஸுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. என்றாலும் அவரது திருமணம் நடந்தபாடில்லை. இந்த நிலையில் தற்போது பிரபாஸின் உறவினர் சியாமளா தேவி என்பவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛தற்போது பிரபாசுக்கு 45 வயதாகி விட்டதால் அவருக்கு திருமணம் செய்ய வேண்டுமென்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். கூடிய சீக்கிரமே சிவனின் அருளால் பிரபாஸுக்கு திருமணம் நடைபெறும்” என்று தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments