டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பஸ் லலித் என்ற லலித் கண்ணங்கர என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
அங்கிருந்து T-56 ரகத் துப்பாக்கி ஒன்று, ரீப்பீட்டர் (Repeater) ரகத் துப்பாக்கி ஒன்று மற்றும் கைத்துப்பாக்கி ஒன்று என்பன கைப்பற்றப்பட்டதாக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் தெரிவித்துள்ளது


