Friday, June 26, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்திய துருக்கி

பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்திய துருக்கி

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை துருக்கி வீழ்த்தியது.

இன்று காலை 7.30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஆஸ்டன் ட்ரஸ்டி கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெற செய்தார்.

பின்னர் துருக்கி வீரர் ஆர்தா குலர் 10ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க 1-1 என ஆட்டம் சமநிலை பெற்றது.

31ஆவது நிமிடத்தில் ஓர்குன் கோக்சு கோல் அடித்து துருக்கியை 2-1 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டு சென்றார். இதனால் முதல் பாதி முடிவில் துருக்கி முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் செபாஸ்டியன் பெர்ஹால்டர் அடித்த கோலின் மூலம் ஆட்டத்தை 2-2 என சமன் அமெரிக்கா செய்தது.

அதன்பிறகு வெற்றிக்கான கோலை அடிக்க இரு அணிகளும் கடுமையாக முயன்றது. அப்போது ஆட்டதின் 90+8 இறுதி நிமிடத்தில் துருக்கி வீரர் கான் அய்ஹான் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தை 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை துருக்கி வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments