Thursday, October 1, 2026
spot_img
Homeபொது செய்திகள்நிலவில் புதிய பெரிய பள்ளம்

நிலவில் புதிய பெரிய பள்ளம்

நாசாவின் சந்திர ஆய்வு விண்கலமான எல்.ஆர்.ஓ. (LRO) நிலவில் ஏற்பட்ட புதிய பெரிய பள்ளம் உள்ளிட்ட பல்வேறு ஆச்சரியமான தகவல்களை கண்டறிந்துள்ளது.

2024ஆம் ஆண்டு நிலவில் வால் நட்சத்திரம் அல்லது குறுங்கோள் மோதியதில் உருவானதாகக் கருதப்படும் இந்தப் புதிய பள்ளம், சுமார் 728 அடி அகலமும் 141 அடி ஆழமும் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது சமீப காலங்களில் சூரிய குடும்பத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

மேலும், இந்த மோதலால் ஏற்பட்ட தூசி மற்றும் பாறைத் துகள்கள் சுமார் 100 கிலோமீற்றர் தொலைவுக்கு பரவியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், நிலவின் மேற்பரப்பிலுள்ள மண் சுமார் 80,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்புற விசையின் தாக்கத்தால் ஏறத்தாழ ஓர் அங்குலம் அளவுக்கு மாற்றமடைவதாகவும் எல்.ஆர்.ஓ. ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் தங்குவதற்கான கட்டமைப்புகளை அமைக்கும் நாசாவின் திட்டங்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments