“முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நேற்று (25) நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 724 சுற்றிவளைப்புகளில் 726 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 1 கிலோகிராம் 499 கிராம் ஐஸ், 280 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 323 கிராம் மதனமோதகம் மற்றும் 731 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்ட இருவர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


