Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நல்லதண்ணி வனப்பகுதியில் தீப்பரவல்

நல்லதண்ணி வனப்பகுதியில் தீப்பரவல்

நல்லதண்ணி, லக்ஷபான வாழமலை தோட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த லக்ஷபான இராணுவத்தினர், ஹட்டன் வன அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மதியம் ஏற்பட்ட தீ, வனப்பகுதியின் மலை உச்சிகளுக்குப் பரவியுள்ளது. மேலும், பரவி வரும் தீயை கட்டுப்படுத்த இராணுவத்தினர் மற்றும் பிற தீயணைப்பு வீரர்களால் வனப்பகுதியில் தீத்தடுப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வன அலுவலகத்தின் வன அலுவலர் தெரிவித்தார்.

பரவி வரும் தீயை கட்டுப்படுத்த விமானப்படையின் உதவியைப் பெறுவது குறித்து விசாரிக்க நோர்வூட் பிரதேச செயலாளர் சமீர கம்லத், வனப்பகுதிக்கு விஜயம் செய்து, பரவி வரும் தீயை கட்டுப்படுத்த முடியாவிட்டால், தீயை கட்டுப்படுத்த முன்வந்துள்ள குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் விமானப்படையின் உதவி கோரப்படும் என்று கூறினார்.

வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments