Wednesday, March 18, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அன்வர்ராஜா நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு

தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அன்வர்ராஜா நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு

தி.மு.க. சட்ட திட்ட விதி 31, பிரிவு 10-ன்படி தி.மு.க. இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.

அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அ. அன்வர்ராஜா, சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அவருக்கு தி.மு.க.வில் இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: புலவர் இந்திரகுமாரி வகித்து வந்த தி.மு.க. இலக்கிய அணி தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா நியமிக்கப்படுகிறார். தி.மு.க. சட்ட திட்ட விதி 31, பிரிவு 10-ன்படி தி.மு.க. இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments