Monday, June 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 4 பேருக்கும் விளக்கமறியல்

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 4 பேருக்கும் விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நான்கு பேரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (21) இரவு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகு ஒன்றையும் அதிலிருந்த 4 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

பின்னர் குறித்த மீனவர்களையும்,இழுவைப் படகையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அந்த மீனவர்களை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments