Tuesday, November 3, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்‘தர்மராஜனாக’ மிரட்டும் ஆர்யா!

‘தர்மராஜனாக’ மிரட்டும் ஆர்யா!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் நடிகர் ஆர்யா, ‘தர்மராஜன்’ என்ற அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள படத்தின் புதிய போஸ்டரில், கையில் ஆயுதங்களுடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் ஆர்யா காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்னால் கூட்டமும் புகையும் நிறைந்துள்ள இந்தப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அழிவுக்குப் பின்னரான புதிய உலகம்!

வழக்கமான அதிரடித் திரைப்படமாக இல்லாமல், உலகம் அழிவைச் சந்தித்த பின்னர் உருவாகும் புதிய உலகத்தின் பின்னணியில் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

அந்தப் புதிய உலகில் பல்வேறு குழுக்களுக்கு இடையே இடம்பெறும் அதிகாரப் போட்டியை மையமாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளான அடிமுறை மற்றும் மல்லகம்பம் ஆகியவை படத்தின் சண்டைக் காட்சிகளில் முக்கிய இடம்பிடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நட்சத்திரக் கூட்டணியில் வேட்டுவம்!

ஆர்யாவுடன் அட்டகத்தி தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன், சபீர் கல்லரக்கல் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

‘தங்கலான்’ திரைப்படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவையும், செல்வா ஆர்.கே படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர்.

ஐந்து மொழிகளில் வெளியாகும் திரைப்படம்!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உலகப் பின்னணி, அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் நட்சத்திரக் கூட்டணி எனப் பல அம்சங்களுடன் உருவாகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments