Thursday, August 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தம்பலகாமம் பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் பௌர்ணமி கலை விழா

தம்பலகாமம் பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் பௌர்ணமி கலை விழா

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பௌர்ணமி கலை விழா நேற்று மாலை (26) தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி,உப தவிசாளர் வி.விஜயகுமார் ,முள்ளிப்பொத்தானை விகாரையின்  விகாராதிபதி, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி மேனகா பாக்கியராஜா உட்பட கலாசார அதிகார சபை நிருவாக உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த இந் நிகழ்வில், பிரதேசத்தின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாத்து அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்,மேற்கத்தைய பல்துறைசார் கலை கலாசார நிகழ்வுகள்,பாடல்கள், நடனங்கள்,  உள்ளிட்ட பல்வேறு கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் மாணவர்களின் திறமைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பௌர்ணமி தினத்தின் ஆன்மிக மற்றும் கலாசார முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பிரதேசத்தின் பூவின் சமூகங்களுக்கிடையே  கலை மற்றும் கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாரம்பரிய கலை வடிவங்களை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments