இலங்கையில் தனிநபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மாதமொன்றுக்குத் தேவைப்படும் குறைந்தபட்சச் செலவு 17,117 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தினால் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிடப்பட்டுள்ள புதிய உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு எல்லைக்கு அமைவாக இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டின் பெறுமதி 16,690 ரூபாவாகப் பதிவாகி இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 427 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
ஒரு மனிதன் தனது அன்றாட அடிப்படைத் தேவைகளைச் (உணவு மற்றும் இதர தேவைகள்) பூர்த்தி செய்யத் தேவைப்படும் மிகக் குறைந்தபட்ச செலவின மதிப்பீடே இந்த வறுமைக் கோட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது.
மாவட்ட ரீதியிலான முழு விபரங்கள் கீழுள்ள இணைப்பில் https://www.statistics.gov.lk/povertyLine/2021_Rebase


