Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ட்ரம்புடன் இங்கிலாந்து பிரதமர் ‍தொலைபேசி உரையாடல்!

ட்ரம்புடன் இங்கிலாந்து பிரதமர் ‍தொலைபேசி உரையாடல்!

தொடர்ந்து நடைபெற்று வரும் மத்திய கிழக்கு மோதல் குறித்து நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் இங்கிலாந்துப் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஹோர்முஸ் நீரிண‍ையை மீண்டும் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாதித்தனர்.

உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான இந்த நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்து நடவடிக்கை பெப்ரவரி 28 அன்று ஈரான் போர் தொடங்கியதிலிருந்து சுமார் 95% குறைந்துள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை நடந்த உரையாடலின் போது, ​​உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது அவசியம் என்பதில் இரு தலைவர்களும் உடன்பட்டதாக இங்கிலாந்தின் அரச செய்திச் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கியதிலிருந்து, அந்நாடு அந்த நீர்வழிப்பாதையைத் திறம்படத் தடுத்துள்ளது.

உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% பொதுவாக இதன் வழியாகவே செல்கிறது.

மேலும், இந்தப் போரைத் தொடர்ந்து உலகளாவிய எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன; மசகு எண்ணெய் விலை 45% அதிகரித்து ஒரு பீப்பாய் 110 டொலர்களுக்கும் அதிகமாக உள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments