Thursday, March 12, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஜன.,31ல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் அதிபர் திரவுபதி முர்மு

ஜன.,31ல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் அதிபர் திரவுபதி முர்மு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன.31ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31ல் துவங்குகிறது. அன்றைய தினம் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்., 1ல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியானது, பிப்ரவரி 13ம் தேதி நிறைவு பெறும். கூட்டத்தில் அதிபர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார். பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிப்பார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி, மார்ச் 10ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும். கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு, ஜனவரி 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தரும்படி அரசு தரப்பில் எதிர்க்கட்சிகளிடம் வலியுறுத்தப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments