Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி - ஐ.நா பிரதிநிதிகள் சந்திப்பு

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி – ஐ.நா பிரதிநிதிகள் சந்திப்பு

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையிலுள்ள வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்- அண்ட்ரே பிரேன்சே (Marc-André Franche) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் நிலவும் நீண்டகால மனிதாபிமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

‘டித்வா’ சூறாவளிக்குப் பின்னர் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு இணையாக மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்தும், 2025 டிசம்பர் முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்ட மனிதாபிமான முன்னுரிமைகள் திட்டத்தின் (Humanitarian Priorities Plan – HPP) அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளான அஸாம் பாக்கீர் மாக்கார் (Azam Bakeer Marker), வகீஷ பெரேரா மற்றும் டி.சி.எம்.என்.ஆர்.டி. குரே (TCMNRT Cooray) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments