அரச அதிகாரிகள் மற்றும் சட்டப்படி சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய நபர்கள், தண்டனைக்கு உள்ளாகாமல் அவற்றை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (30) நிறைவடைகிறது என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் (Anti-Corruption Act No. 9 of 2023), காலக்கெடுவுக்குள் விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) எச்சரித்துள்ளது.
இதன்படி அனைத்து விபரங்களையும் https://ald.ciaboc.gov.lk/ என்ற இணையதளம் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
காகித வடிவிலான சமர்ப்பிப்புகள் இனி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
உரிய காலத்திற்குள் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கத் தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சட்டத்தால் கடமைப்பட்ட அனைவரும் காலக்கெடு முடிவதற்குள் தங்கள் விபரங்களை நிகழ்நிலை மூலம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


