பெருமளவு வெடிபொருட்கள் நிரம்பிய ஆளில்லா விமானமொன்று செர்னோபில் அணுஉலை மீது மோதியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
செர்னோபில் அணுஉலையின் அழிக்கப்பட்டநான்காவது உலையை பாதுகாக்கும் பாதுகாப்பு கவசத்தைவெடிமருந்துகள்நிரம்பிய ஆளில்லா விமானம் தாக்கியது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமானம் தாக்குவதை காண்பிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். சிதைவுகளையும் வீடியோவில் காணமுடிகின்றது.


