Wednesday, June 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்செம்மணியில் 8 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணியில் 8 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 20ஆம் நாளான இன்று 09 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 8 சிறுவர்களுடைய எச்சங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு எலும்புக்கூட்டின் மீது இருந்து நாணயக் குற்றி ஒன்று சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக 327 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 311 எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments