Sunday, October 11, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து மைக்கேல் ஹஸி விலகல்!

சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து மைக்கேல் ஹஸி விலகல்!

ஐ.பி.எல். தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி பதவி விலகியுள்ளார்.

தற்போது பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வரும் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், பயிற்சியாளர் குழுவிலும் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிஎஸ்கே அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக 15 ஆண்டுகள் பணியாற்றிய மைக்கேல் ஹஸி, வீரராக இரண்டு முறையும் பயிற்சியாளராக மூன்று முறையும் ஐபிஎல் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இந்நிலையில், மற்றொரு ஐபிஎல் அணியில் இணைவது தொடர்பாக ஹஸி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே, அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் ஆகியோரும் விலகியுள்ளனர். இதையடுத்து, பந்துவீச்சுப் பயிற்சியாளராக மொஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments