Wednesday, March 11, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்சுசீந்திரனின் 2கே லவ் ஸ்டோரி படத்தின் `எதுவரை உலகமோ’ பாடல் வெளியீடு

சுசீந்திரனின் 2கே லவ் ஸ்டோரி படத்தின் `எதுவரை உலகமோ’ பாடல் வெளியீடு

வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் “நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, ஈஸ்வரன்” உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள ‘2கே லவ் ஸ்டோரி’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது. சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் ‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் முதல்காட்சி பதாகை மற்றும் முன்னோட்டம் வெளியாகி வைரலானது. இந்த படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. திரைப்படம் காதல் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் 4-வது பாடலான எதுவரை உலகமோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments