ஏ – 9 வீதியின் பூனேவ, கல்கந்தேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஏ – 9 வீதியின் பூனேவ, கல்கந்தேகம பகுதியில் இன்று அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய லொறி மீது, உரம் ஏற்றிக்கொண்டு வந்த பெரிய கொள்கலன் லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில், நொரோச்சோலை இலந்தடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை (வயது 46) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை (வயது 35) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.
சம்பவத்தில் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பூனேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


