Friday, July 3, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சாரதிக்கு தூக்கக் கலக்கம்: லொறி விபத்தில் மூவர் காயம்

சாரதிக்கு தூக்கக் கலக்கம்: லொறி விபத்தில் மூவர் காயம்

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த சிறிய ரக லொறி ஒன்று, விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், பொல்பிட்டிய பகுதியில் இன்று (03) அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – கடவத்தை பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி உள்ளிட்ட மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு கித்துல்கல பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணம் என்று பொல்பிட்டிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments