Saturday, September 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிறுவன் உயிரிழப்பு

கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியிலுள்ள கோவிலொன்றில் நடைபெற்ற விழாவின்போது பட்டாசு ஒன்று வெடித்ததில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

கிரான், குளக்காடு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், நேற்று (11) இரவு கோவில் வளாகத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களின்போது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இரவு சுமார் 11 மணியளவில், குறித்த பட்டாசு கொளுத்தப்பட்ட நிலையில் வெடிக்காமல் இருந்ததால் அதனை அகற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அதனை பார்வையிடுவதற்காக சிறுவன் அருகில் சென்றபோது, பட்டாசு திடீரென வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments