Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொழும்பு துறைமுக கடற்பரப்பில் மீன்பிடித்த மூவர் கைது

கொழும்பு துறைமுக கடற்பரப்பில் மீன்பிடித்த மூவர் கைது

கடற்படையினரால் கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ஈட்டி துப்பாக்கிகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் ஒரு மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 47 மற்றும் 62 வயதுடையவர்கள் ஆவர்.

குறித்த சந்தேகநபர்கள் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments