Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொக்கொட்டிசோலை பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைப்பு!

கொக்கொட்டிசோலை பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைப்பு!

கடந்த 4 வருடங்களுக்கு பின்பு புதிய அரசாங்கத்தினால் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தினுடாக கொக்கொட்டிசோலை பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக சனிக்கிழமை (11) மீண்டும் கையளிக்கப்பட்டது.

மன்முனை தென்மேற்கு பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த கொக்கொட்டிசோலை பொதுச் சந்தையானது கடந்த நான்கு வருடங்களாக இயங்காத நிலையில் காணப்பட்டு வந்தது.

கொட்டும் மழையிலும் கிளீன் சிறிங்கா வேலைத்திட்டத்தினுடாக புது வருடத்தை முன்னிட்டு இந்த பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் கையளிக்கப்பட்டது.

புதிய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் கிளீன் சிறிலங்கா வேலை திட்டத்தினுடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் என்ன கருவுக்கமைய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் திட்டத்தின் ஒரு கட்டமாக சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் கையளிக்கப்பட்டது .

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக நிரந்தரமான ஒரு பொதுச் சந்தை வசதி இன்றி மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர் இவ்விடயம் சம்பந்தமாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் கவனத்திற்கு பொது மக்கள் கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து தமிழர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பொங்கல் விழா போது தேவையான அத்தியாவசிய பொருட்களை மிகவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments