Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கெஹலியவின் மற்றைய மகளும் பிணையில் விடுதலை!

கெஹலியவின் மற்றைய மகளும் பிணையில் விடுதலை!

பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மற்றைய மகளும் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் இன்று வெள்ளிக்கிழமை (20) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

134 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சொத்து விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹலிய ரம்புக்வெல்லவின் இரு மகள்களும் மருமகனும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்று வியாழக்கிழமை (19) முன்னிலையாகிய போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்போது கெஹலிய ரம்புக்வெல்லவின் ஒரு மகளும், மருமகனும் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ள நிலையில் மற்றைய மகள் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியுள்ளார்.

இதனால் கெஹலிய ரம்புக்வெல்லவின் மற்றைய மகள் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்லவின் மற்றைய மகள் பிணை நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றியதால், நீதிமன்ற உத்தரவின் கீழ் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments