Friday, March 20, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் கமர்சியல் திரைப்படமாக உருவாகி உள்ள கூலி படம் உலக அளவில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. இப்படம் டிக்கெட் முன்பதிவில் மட்டும் 50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

படம் வெளியாக இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனம், சட்டவிரோதமாக படத்தை இணையதளங்களில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டும் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கூலி படத்தை சட்டவிரோதமாக வெளியிடப்படுவதை தடுக்க 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது .

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments