Tuesday, March 17, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்”குட் நைட்” பட இயக்குனருக்கு பரிசளித்த சிவகார்த்திகேயன்

”குட் நைட்” பட இயக்குனருக்கு பரிசளித்த சிவகார்த்திகேயன்

“குட் நைட்” படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுக்கு சிவகார்த்திகேயன் பரிசளித்திருக்கிறார். இயக்குனரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர், ”வாழ்த்துகள் மற்றும் பரிசுக்கு மிக்க நன்றி சிவகார்த்திகேயன் அண்ணா. இந்த வருட பிறந்தநாளை இது மிகவும் சிறப்பாக்கியது” என்று தெரிவித்தார். நடிகர் சிவகார்த்திகேயனின் 24-வது படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. தந்தை-மகன் பிணைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படும் இப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லாலுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments