Saturday, August 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்காயமடைந்த 28 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

காயமடைந்த 28 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

பல்லன்சேன சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இன்று (07) காலை இந்தச் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கலகமடக்கும் பிரிவு மற்றும் விமானப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.

 

நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வரக் கண்ணீர்ப்புகைத் தாக்குதலும் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலையின் கட்டுப்பாட்டைச் சிறைச்சாலைத் துறை மீண்டும் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments