Thursday, March 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்காட்டு யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு!

காட்டு யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு!

புத்தளம், நவகத்தேகம, கெலேவெவ பகுதியில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நவகத்தேகம, கெலேவெவ பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய வயோதிபர் என தெரியவந்துள்ளது.

இந்த வயோதிபர் 2 ஏக்கர் தென்னந்தோப்பில் தனியாக வசித்து வந்துள்ள நிலையில் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வயோதிபரின் சகோதரன் தென்னந்தோப்பில் வைத்து வயோதிபரின் சடலத்தை கண்டுள்ள நிலையில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments